தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். சென்னை: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், 1வது தமிழகப் பதிப்பு, 1983. (அச்சக விபரம் தரப்படவில்லை).
42 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 19×12 சமீ.
வங்கம் தந்த பாடம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். யாழ்ப்பாணம்: கமுகு பதிப்பகம், 2வது பதிப்பு, பங்குனி 1988, 1வது தமிழகப் பதிப்பு, 1983. (அச்சக விபரம் தரப்படவில்லை).
52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×11.5 சமீ.
பங்களாதேசின் விடுதலைக்காகப் போராடியவரும், தேசிய சோசலிசக் கட்சியின் ஸ்தாபகருமான கேர்னல் அபுதாகிரின் (Colonel Abu Taher) நீதிமன்றச் சொற்பொழிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பங்களாதேஷ் அரசுக்கெதிராக இவர் நடத்திய புரட்சி நசுக்கப்பட்டு 1976 ஆடி 21, அதிகாலை 4 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது நீதி மன்றத்தில் இவர் ஆற்றிய நீண்ட உரையின் தமிழ் மெழிபெயர்ப்பே ‘வங்கம் தந்த பாடம்” என்ற இந்நூலாகும். மூலநூலின் மீள்பதிப்பு, இந்திய இராணுவம் ஈழமண்ணில் நிலைகொண்டிருந்தபோது, பரந்த அறிவூட்டலை நோக்காகக் கொண்டு, இலங்கையில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது.