தனபாக்கியம் குணபாலசிங்கம். லண்டன் நு12 6ளுறு: திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம், இலக்கம் 6, ஷெல்லி அவென்யு, மனர் பார்க், ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, 2018. (சென்னை 600094: ஆதிலட்சுமி பிரஸ்).
76 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.
திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம் தான் முன்னர் எழுதி வெளியிட்டிருந்த ஒன்பது வரலாற்று நூல்களிலும் சொல்லியிருந்த முக்கிய தமிழர் வரலாற்றுத் தகவல்களைத் திரட்டித் தனியாக இந்நூலில் வழங்கியுள்ளார். முன்னர் இவர் எழுதிய வரலாற்று நூல்களான, இலங்கையிற் தொல்லியல் ஆய்வுகளும் திராவிடக் கலாச்சாரமும் (1988), கிழக்கே வங்கம் வரை பரவிய ஆரியமும் ஈழத்தில் வங்க இளவரசர் குடியேற்றமும் (1989), மட்டக்களப்பு மான்மியம்-ஓர் ஆராய்ச்சி (1993), தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும் (2008), குமரிக் கண்டம் முதல் சுமேரியா வரை தமிழர் வரலாறுகள் (2011), மனித வரலாற்றினை எழுதிவரும் மரபணுக்கள் (2014), தமிழும் ஈழமும் கடந்துவந்த வரலாற்றுச் சோதனைகள் (2014), கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்க வாசக சுவாமிகள் (2013), ஊர் எழுத்தாளரின் அரைநூற்றாண்டு வாழ்க்கை அனுபவங்கள் (2016) ஆகிய நூல்களில் இடம்பெற்ற தமிழகமும் ஈழமும் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளின் திரட்சியாகவே இந்நூல் அமைகின்றது.