13958 வரலாறு 10.

நூல் எழுத்தாளர் குழு (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் குறிப்பிடப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

vii, 70 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.

சிறிது காலம் இடைநிலைப் பாடசாலைப் பாடவிதானத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த ‘வரலாறு’ மீண்டும் பாடசாலைகளில் கற்பிக்கப்பட வேண்டுமெனக் கல்வியமைச்சு தீர்மானித்த வேளையில் ஆறாம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்காக வெளியிடப்பட்டிருந்த வரலாற்றுப் பாடநூல் தொடரில் இது பத்தாம் ஆண்டு மாணவர்களுக்குரியதாக உருவாக்கப்பட்டிருந்தது. மூல நூல் எழுத்தாளர் குழுவில் M.M.P.குணரத்ன, P.V.கருணாரத்ன, K.A.P. பெரேரா, S.A.C.திசாநாயக்க ஆகியோரும், மூலநூல் பதிப்பாசிரியராக றஞ்சனீ சேனாநாயக்கவும் பணியாற்றியுள்ளனர். இந்நூலில் மத்திய கால ஐரோப்பா, மறுமலர்ச்சி, 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை, இலங்கையும் போர்த்துக்கேயரும், மலையக இராச்சியம், இலங்கையும் ஒல்லாந்தரும், இலங்கைக் கரையோரப் பகுதிகளிலே போர்த்துக்கேயரின் ஆதிக்கமும் ஒல்லாந்தரின் ஆதிக்கமும் ஆகிய ஏழு பாடப்பரப்புகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43423).

ஏனைய பதிவுகள்