ரகுமான் ஜான் (தொகுப்பாசிரியர்). கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1, 1வது பதிப்பு, ஜுலை 2019. (சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை).
642 பக்கம், விலை: இந்திய ரூபா 575.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-7752392-4-6.
முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய பத்தாண்டுகளின் அரசியல் நிலைமை முதலாம் அத்தியாயத்திலும், தொடர்ந்து வரும் 21 அத்தியாயங்களில் தேசிய இனப்பிரச்சினையில் மார்க்சிய நிலைப்பாடு (இ.சொரூபன்), எதிரிகளும் நண்பர்களும் (க.அரவிந்த்), முஸ்லிம் மக்கள் தொடர்பாகச் சில குறிப்புகள் (ச.கிறிஸ்தோபர்), தேசிய சக்தி பற்றிய சில பிரச்சினைகள்-1 (ஏகலைவன்), தேசிய சக்தி பற்றிய சில பிரச்சினைகள்-2 (ஏகலைவன்), சிறீலங்கா-ஒரு தோல்வியுற்ற புரட்சி (ரோகான் குணரத்ன), தனிநபர் பயங்கரவாதம் பற்றி (வாணி), மனித உரிமைகள், சிங்களப் பேரினவாதத்தின் இயக்கப்போக்கின் திசை (தேவதாஸ்), எம்முன்னுள்ள உடனடிப் பணிகள் (உயிர்ப்பு இதழ் 3இன் ஆசிரியர் தலையங்கம்), தேசியவாதம் குறித்த ஒரு விவாதத்திற்கான முன்னுரை, பெண்களும் புரட்சியும் (மார்க்சியத்திற்கும் பெண்ணியத்திற்கும் இடையிலான மகிழ்ச்சியற்ற திருமணம்: மிக முற்போக்கான ஒரு கூட்டிணைவினை நோக்கி), இலங்கையில் தேசங்களின் உருவாக்கம் (தேவதாஸ்), தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் அரசியலும் (தேவதாஸ்), மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும் அமைப்பியல்வாதம் தரும் புதிய வெளிச்சம் (ஏகலைவன்), அழகியலும் அரசியலும் (ஆதி), சிங்கள இனவாதம் தமிழ்த் தேசம் குறித்துக் கட்டமைத்துள்ள ஐதீகங்கள் (தேவதாஸ்), யுத்தமும் அதன் விளைவுகளும், (உயிர்ப்பு இதழ் 6இன் ஆசிரியர் தலையங்கம்), தமிழ்த் தேச இருப்பை நீக்கம் செய்யும் சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் (நந்தனார்), முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் (விக்டர்) ஆகிய அரசியல் கட்டுரைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.