தம்பையா அரியரத்தினம். அனலைதீவு: தம்பையா அரியரத்தினம், 1வது பதிப்பு, ஜுலை 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
xvii, 66 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
ஆசிரியர் அனலைதீவின் பண்பாட்டு வரலாற்றினை நன்கு ஆராய்ந்து ஊருக்கான பெயர் விளக்கம், அதன் அமைவிடம், நில அமைப்பு, சமயம், தொழில்வளம், மண்வளம், கல்வி அமைப்பு, சமூக அமைப்பு, கலை அம்சங்கள் என்பனவற்றை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். அனலைதீவில் காணப்படும் சைவ ஆலயங்கள், கிறிஸ்தவ ஆலயம், என்பவற்றின் வரலாற்றினையும், வழிபாட்டு மரபினையும் பதிவுசெய்துள்ளார். அனலைதீவு மக்களின் குலதெய்வங்களான ஐயனார், புளியந்தீவு நாகேஸ்வரன், வடக்கு இராஜராஜேஸ்வரி அம்பாள், மனோன்மணி அம்பாள், பிள்ளையார் ஆலயம், முருகமூர்த்தி ஆலயங்களின் வரலாற்றினையும் வழிபாட்டுச் சிறப்புகளையும் விரிவாக விளக்கியுள்ளார். அனலைதீவு புளியந்தீவின் தென்பால் அமைந்துள்ள நயினாதீவுக்கும் புராதன காலம் தொடக்கம் நெருக்கமான தொடர்பு இருந்ததை இந்நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். ஆலயங்கள் உள்ளிட்ட முக்கியமான படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அனலைதீவின் பண்பாட்டு வரலாற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலாசிரியர் ஓய்வுநிலை உதவித் திட்டமிடல் பணிப்பாளராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் அரிமாக் கழகத்தினதும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினதும் முக்கிய பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.