13976 கலை நிலம் 2014-2015.

பத்மராணி சிவஞானராசா (மலராசிரியர்). உடுவில்: வலிதெற்கு பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேசச் செயலகம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

(7), xiii, 146 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

வலிகாமம் தெற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமங்களின் முக்கிய இடங்கள், கோவில்கள் மற்றும் சமூகத்திற்கு சகல துறைகளிலும் சேவை செய்த பெரியார்கள் பற்றிய கட்டுரைகள் என்பவற்றை அடக்கியதாக இம்மலர் 03.07.2015 அன்று இணுவில் சிவகாமியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கந்தரோடையிற் கிடைத்த தொல்லியற் சின்னங்கள் பற்றிய கட்டுரையும்,  இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில், இணுவில் கந்தசுவாமி கோவில், இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் கோவில், கதிரமலை சிவன் கோவில், ஆலடி கட்டுக்குள நாச்சிமார் கோவில், ஏழாலை தம்பவத்தை வைரவர் கோவில், சாளம்பை முருகமூர்த்தி கோவில், தாழையடி ஐயனார் கோவில், வருஷப்புல ஸ்ரீ மகாமாரி அம்பாள் ஆலயம், சூராவத்தை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்,  ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் தேவஸ்தானம், சேர்.பொன். இராமநாதன் சமாதி ஆலயம் ஆகியவற்றின் வரலாறுகள் பற்றிய கட்டுரைகளும், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், சி.வை.தாமோதரம்பிள்ளை, பெரியார் விசுவநாதர் வர்மலிங்கம், கா.வ.வைத்திலிங்கம் முதலியார், ஆத்மஜோதி நா.முத்தையா, வீரமணி ஐயர், மகாதேவக் குருக்கள் (ஞானாக்கினி), தவில் மேதை வி.தட்சிணாமூர்த்தி, தாவடியூர் திருஞானசம்பந்தன், பொன்னையா திருபாலசிங்கம், வலிதெற்குப் பிரதேச முது இசைக் கலைஞர்கள் ஆகியோரின் வாழ்வும் பணிகளும் பற்றிய கட்டுரைகளும், நாதஸ்வரக் கலைஞர் இராசு சுந்தரமூர்த்தியுடனான நேர்காணலும்;, குப்பிளான் கிராமம், வலிகாமம் தெற்கு பிரதேசம் போன்றவற்றின் வரலாறும், அமெரிக்கன் மிசனரி, இணுவில் இந்துக் கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி என 34 ஆக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Lowest Minimum Put Casino

Posts Kyc Files In the A great £5 Bingo Web site Choices To help you Deposit Added bonus Fund? Games Alternatives And App Company Put

Safe & Safe Online casinos

Articles Safe Online Us Casinos Las Atlantis Gambling enterprise: Diving On the Cellular Gamble Get the best Online casinos In your County It trend out