வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீனித்தம்பி கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: மனுவேதா வெளியீடு, 143/23, எல்லை வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park).
xiv, 234 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-42694-0-8.
இலங்கையின் தென்கிழக்காக ஒரு பரந்துபட்ட நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்டு விளங்கியதே மட்டக்களப்புத் தேசமாகும். கி.மு.500 முதலே இதன் நாகரீகம் மிக்க வரலாற்றுக்காலம் தோற்றம் பெறுவதை இந்நூல் வெளிப்படுத்தமுனைகின்றது. பண்டைய மட்டக்களப்பின் எல்லையானது வடக்கே மன்னம்பிட்டியை உள்ளடக்கிய வெருகல் ஆற்றினையும், தெற்கே கட்டகாமம் உள்ளிட்ட மாணிக்ககங்கைப் பகுதிகளையும், மேற்கே ஊவா-வெல்லசைப் பிரிவினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டிருந்தது. இந்நூலில் மட்டக்களப்புத் தேசத்தின் வரலாற்றையும் வழக்காறுகளையும் முக்கிய வரலாற்றுப் பதிவுகளும் கல்வெட்டுப் பாடல்களும், மட்டக்களப்புத் தேசமும் பூர்வீகக் குடிகளும் (இயக்கர், நாகர், வேடர், திமிலர்), மட்டக்களப்புத் தேசத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு, மட்டக்களப்புத் தேசத்தின் சமூகக் கட்டமைப்பு (தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர்) மட்டக்களப்புத் தேசத்தில் நிலைபெற்ற சேரநாட்டு வழக்காறுகளும் பண்பாடுகளும், மட்டக்களப்புத் தேசமும் கலிங்கத் தொடர்புகளும் ஆகிய ஆறு இயல்களின் வாயிலாக விரிவாக ஆய்வுசெய்துள்ளார்.