சி.பத்மநாதன். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கொழும்பு 13: அனுஷ் பிரின்டர்ஸ்).
xvi, 644 பக்கம், வண்ணப் புகைப்படத் தகடுகள், விலை: ரூபா 1200., அளவு: 23×15.5 சமீ., ISBN: 955-9233-31-2.
இந்நூல் இலங்கையில் 13ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட தமிழ்ச் சாசனங்களைப் பற்றியது. இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய மூலங்களிலே சாசனங்கள் முதன்மையானவையும் பிரதானமானவையுமாகும். அவற்றுட் பெரும்பாலானவற்றின் வாசகங்களும் அவற்றைப் பற்றிய விளக்கங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல்வழியாக இலங்கை வரலாறு, தமிழர் சமுதாயம், அதன் பண்பாட்டு மரபுகள், தமிழ்மொழியின் வளர்ச்சி, இந்து-பௌத்த-சமண சமயங்களின் வளர்ச்சி என்பவை பற்றிய பெருமளவிலான விபரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை வாசகருக்கு வழங்குகின்றது. பிராமிச் சாசனங்கள், சோழர்காலக் கல்வெட்டுக்கள், தென்னிலங்கைச் சாசனங்கள் 1,2, திருகோணமலைச் சாசனங்கள், மட்டக்களப்பு தேசத்துச் சாசனம், யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள் என ஏழு பகுதிகளைக் கொண்டது. இந்நூலில் அடங்கும் கட்டுரைகள் இருவகையானவை. கல்வெட்டுகளைப் பற்றியவை ஒரு வகையானவை. ஏனையவை செப்பேடுகள், கோயில் மணிகள், விளக்குகள், கலசங்கள், போன்ற உலோகப் பொருள்களில் எழுதப்பட்டவை தொடர்பானவை. இலங்கையில் வழங்கும் தமிழ் மொழி மத்திய காலத்திலேயே அதற்குரிய தனிப்பண்புகளைப் பெற்று விட்டதென்பதை இந்நூலின் மூலமாக அறியமுடிகின்றது.