13986 யார் இந்த இராவணன்?

என்.கே.எஸ்.திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, அனுசரணை, திருக்கோணமலை: இராவணசேனை, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxii, 342 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 980., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-3726-01-8.

தீவிர சிவபக்தனும், லங்காபுரி சக்கரவர்த்தியுமான இராவணனின் வரலாறு. இராவணனும் இராமாயணமும்-ஓர் அறிமுகம், இராவணனின் பரம்பரையும் குலமும், இராவணன் வாழ்ந்த காலம், இராவணன் ஆட்சிசெய்த பிரதேசங்களும் நாடுகளும், இராவணன் ஸ்தாபித்த சிவலிங்கங்களும் கோயில்களும், இராவணனை தெய்வமாக வழிபடும் மக்களும் இராவணன் கோயில்களும், இராவணனின் திரிகூடகிரி, இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்தனவா?, இராவணனின் வல்லமை என்ன?, இராவணன் பெண் பித்தனா?, இராவணன் பேசிய மொழி என்ன-அவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன்? ஆகிய பதினொரு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் முன்னதாக ஞாயிறு தினக்குரலில் வாரம் தோறும் 14 மாதங்களாகப் பிரசுரமாகி வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தது. இராவணன் தொடர்பான அரிய பல தகவல்களைப் பதிவுசெய்யும் இந்நூல் இராவணன் பற்றிய சர்ச்சைக்குரிய பல வினாக்களுக்கு விடையளிப்பதாக உள்ளது. என்.கே.எஸ். திருச்செல்வம் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 35 வருடங்களாக கொழும்பில் வாழும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பட்டம்பெற்றவர். ஆடைத்தொழிலகமொன்றின் பொது முகாமையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Undersöka Turbo Vegas Casino

Content Se denna webbplats | Vad Befinner sig Swish? Förvissning Kungen Svenska språke Casinosidor Vilka Betalningsmetoder Erbjuds Innan Liten Insättningar? Ni kan selektera att verifiera