சுப்ரபாரதிமணியன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், பழைய எண் 123A, புதிய எண் 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (சென்னை 600005: சாயி தென்றல் பிரின்டர்ஸ்).
110 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-82648-27-7.
தமிழகத்தின் ‘கனவு’ இதழின் ஆதரவுடன் ஒழுங்குசெய்யப்பட்ட அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைப் போட்டியில் பங்குபெற்றவர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் (மு.இராமநாதன்), தூரத்தில் கேட்கும் இசை (இல.சைலபதி), மகாராஜாவின் ரயில் வண்டி (மதுமிதா), முட்கள் (காயத்ரி சித்தார்த்), ஒரு நவீன ரசவாதி (எஸ்.செந்தில்குமார்), ஒன்றுக்கும் உதவாதவன் (எஸ்.ராமகிருஷ்ணன்), காலநதியின் சக பயணிகள் (சுப்ரபாரதிமணியன்), அமெரிக்கக்காரி (உமாஷக்தி), ஒரு வித்தியாசமான புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்க் குரல் (வெங்கட் சாமிநாதன்), பூமியின் பாதி வயது (ஜெயமோகன்), உண்மை கலந்த நாட்குறிப்புகள் (பராசக்தி சுந்தரலிங்கம்), உண்மை கலந்த நாட்குறிப்புகள் (தமிழ் மகன்), திரைகடல் ஓடியும் தீந்தமிழ் வளர்த்தல் (நாஞ்சில்நாடன்), பேதம் உணராத குழந்தைமை: அ.முத்துலிங்கத்தின் அக்கா சிறுகதை (பாவண்ணன்) ஆகிய படைப்பாக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.