ஜோர்ஜ் இதயராஜ், உவெஸ்லி இதயஜீவகருணா, எட்வேட் இதயச்சந்திரா. ஈழத்துப் பூராடனார் (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, 2003. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம். 1183 பொரஸ்ட்வுட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6).
133 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21×14 சமீ.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் மின்கணனித் தமிழ் சாதனை வரலாறாக எழுதப்பட்டுள்ள இந்நூல் கணனிவழித் தமிழ் அச்சீட்டின் ஆரம்பகால வரலாறு பற்றியும், ஈழத்துப் பூராடனார் என அறியப்பெற்ற க.த.செல்வராஜகோபால் அவர்களின் குடும்பத்தினரின் அரும்பணி பற்றியும் விபரிக்கிறது. மின் கணனி ஏற்றுக்கொள்ளும் தமிழ் எழுத்துக்கள், தமிழ் எண்களும் இலக்கங்களும், தொகுத்துப் பதிப்பித்தவர் உரை, Computer based Publishing in Tamil மின்கணனித் தமிழை நெறிப்படுத்திச் சாதனை படைத்தவரின் கருத்துக்கள், மின்கணனிப் பாவனை எழுத்துச் சீர்திருத்தம், எங்களது மென்பொருளும் விசைப் பலகையும், அச்செழுத்தும் மின்கணனி எழுத்தமைப்பும், Implementation of Indian Languages on Computers- A Case Study of Tamil> உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்க ஐந்தாவது மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரை, கட்டுரையாசிரியரின் சிந்தனைகள், தமிழ் வளர்ச்சியில் மின்கணனித் தமிழ் அச்சமைப்பின் பங்கு, பின் உரை, ஜீவா பதிப்பகத்தாரின் எழுத்துறுப்பு இலக்கணம் மின்கணனி ஆய்வு நூல்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37974).