தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை. கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இல. 14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 10: பாஸ்ட் பிரின்டெரி பிரைவேட் லிமிட்டெட், இல. 165, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை).
viii, 9-39 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7544-08-3.
நூல் ஒன்றின் ஆரம்பப் பக்கங்கள், உள்ளடக்கம், அதைத் தொடர்ந்துவரும் பக்கங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தவதற்கானதொரு வழிகாட்டி. நுலாசிரியர்களே ‘நூலாசிரிய வெளியீட்டாளர்களாக’ வலம்வரும் இலங்கையில் பொதுமைப்பாடெய்திய ஒரு வரைமுறை நூலியல்துறையில் வேண்டப்படுகின்ற இக்காலகட்டத்தில் இக்கைந்நூலின் வரவு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. ஒரு தேசிய நூலகம் என்ற வகையில் இவ்வமைப்பு வழங்கும் ஆலோசனைகள் வெளியீட்டாளர்களால் கருத்துக்கெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆரம்பப் பக்கங்கள், உள்ளடக்கப் பகுதி, பின்னிணைப்புப் பக்கங்கள் எழுத்துக்களின் அளவு, பக்கங்களுக்கு இலக்கமிடல், வெளிப்புற அட்டை தயாரித்தல் ஆகிய ஆறு பிரதான இயல்களில் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது.