இலங்கைத் தேசிய நூலகம். கொழும்பு 7: இலங்கைத் தேசிய நூலகம், 14, சுதந்திர வீதி, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 10: சதொச பிரின்டர்ஸ், 290, டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை).
x, 28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 18.5×25 சமீ., ISBN: 955-9011-76-6.
இலங்கையில் நூலகங்களின் உபயோகத்திற்குப் பொருத்தமான மரத்தளபாடங்களின் வடிவமைப்பைக் கொண்ட வெளியீடு இது. ஒவ்வொரு மரத் தளபாடங்களுடனும் அவற்றுக்கான வரைபடங்கள், அவற்றைத் தயாரிக்கும் விபரங்கள் போன்றன குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதனால் வடிவமைப்புக்கு ஏற்ப மரத் தளபாடங்களைத் தயாரிப்பது பற்றித் தெளிவாக விளக்கத்தைப் பெறமுடிகின்றது. நூற்பட்டியற்கோவைப் பெட்டகம், அறிவித்தற் பலகை, நூற்காட்சிக்கான தாங்கி, நூல்களைக் காட்சிக்கு வைக்கும் தாங்கிகள், பருவ வெளியீட்டுத் தாங்கி, நூல் வழங்கும் மேசை, இரவல் வழங்கும் நூல்களின் பதிவுத்தட்டு, கைதாங்கிக் கதிரை, நூலகரின் மேசை, சிறுவர் கதிரை, வாசிப்ப மேசை, புதினத்தாள் தாங்கி, நூற்தட்டு/ நூற்தட்டின் பின்பக்கம், பருவ வெளியீட்டுத் தாங்கி, புதினப் பத்திரிகைத் தாங்கி, கண்ணாடி அலுமாரி, நூல் தாங்கிகள், நூற்தள்ளுவண்டி, சஞ்சிகைகளுக்கான பெட்டிகள், ஒளிப்பதிவு நாடாத் தாங்கி, விசேட ஆராய்ச்சிப் படிப்பறைகள் என பல்வேறு வகையான நூலகத் தளபாடங்கள் பற்றி இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.