11037 மின் கணனித் தமிழ் அச்சமைப்பில் உருவான நிழல் எனும் முதல் தமிழ்ப் பத்திரிகையின் வரலாறு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (கனடா: றீ கொப்பி, வுழசழவெழஇ ழுவெயசழை).

274 பக்கம், புகைப்படத் தகடுகள்;, விலை: கனேடிய டொலர் 5., அளவு: 21ஒ14 சமீ.

மின்கணனித் தமிழ் அச்சமைப்பின் பிறப்பிடம் கனடாவே, தொரன்ரொ றிப்ளக்ஸ் அச்சகம்: மின் கணனித் தமிழ் அச்சமைப்பின் முன்னோடிகள், மின் கணனித் தமிழும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும், கனடாவில் வளரும் தமிழ்ச் சமுதாய வரலாற்றுக் கண்ணோட்டம், கனடாவில் வளரும் தமிழ் அச்சுக்கலை வளர்ச்சியும் பொதுசனத் தொடர்பு ஊடக வளர்ச்சியும், மின் கணனித் தமிழ் அச்சமைப்பில் வெளிவந்த முதற் பத்திரிகை-நிழல் ஆகிய கட்டுரைகளின் வழியாக ஆசிரியர் அச்சுக் கலையின் புதிய பரிணாம வளர்ச்சியில் ஈழத்தின் கிழக்குக் கரையோர மட்டக்களப்பு மாநிலத்தில் உள்ள தேற்றாத் தீவு என்னும் குக்கிராமத்தில் இருந்து கனடாவில் குடியேறிய ஒரு குடும்பத்தின் அரிய முயற்சியும் கலந்துள்ளது என்பதைப் பதிவுசெய்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34203).

ஏனைய பதிவுகள்

Casilando Prämie Bloß Einzahlung

Content Fazit: Casino Über 1 Euroletten Einzahlung Wanneer Triftiger Abreise As part of Diese Spielewelt Auftreiben Sie Diese Besten Angebote, As part of Denen Diese