புலவர் சிவங்கருணாலய பாண்டியனார், இ.இரத்தினம். யாழ்ப்பாணம்: அகில இலங்கை காந்தி சேவா சங்கம், 171, முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஆனி 2005. (யாழ்ப்பாணம்: அம்பாள் பிரிணடர்ஸ், பரமேஸ்வராச் சந்தி, திருநெல்வேலி).
xxvii, 177 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21.5ஒ14.5 சமீ., ISBN: 955-1224-00-0.
1948 முதல் வெளியான காந்தீயம் என்ற மாத இதழின் ஆசிரியராக 1968இல் பொறுப்பேற்ற சிவங்கருணாலய பாண்டியனாரின் ஆசிரியர் தலையங்கங்கள் சிறப்பானவை. பின்னாளில் 1969 மாசி இதழ் முதல் இவ்வாசிரியத் தலையங்கங்களைத் தொடர்ந்து எழுதியவர் இ.இரத்தினம் அவர்கள். காந்திய ஆசிரியர் தலையங்கங்களுள் 1968 முதல் 1978 தசாப்தத்தில் வெளிவந்த 75 தலையங்கங்களைத் தேர்ந்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் 1903-1976 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இ.இரத்தினம் 1916-1981 காலப்பகுதியில் வாழ்ந்தவர்.