11044 மெய்ப்பொருள் நிலை.

சே.வேல்முருகு. ஐக்கிய இராச்சியம்: சே.வேல்முருகு, மில்ட்டன் கீன்ஸ், இங்கிலாந்து, 1வது பதிப்பு, சித்திரை 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(13), 47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.

இலங்கையில் மருத்துவப் பயிற்சியாளராகப் (R.M.P) பணியாற்றிய பேரறிஞர் சே.வேல்முருகு அவர்கள் மெய்ப்பொருள் நிலை (State of Reality) பற்றி இயற்றிய மெய்யியல் தத்துவப் பாடல்கள் இவை. முன்னுரை-சொல்லுரை, மெய்யுணர்வு, நற்சிந்தனை, மனித வாழ்க்கை, துரியாதீதம், இனமுறைமை, ஞான ஊஞ்சல், இல்வாழ்க்கை நல்லறம் ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் இவை தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17023).

ஏனைய பதிவுகள்

13118 ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: சத்தியா பிறின்ரேர்ஸ், மானிப்பாய் வீதி). 48 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20×14 சமீ.