11045 அன்றாட வாழ்வில் அனைவருக்கும் உளவியல் – முதலாம் பாகம்.

எம்.எச்.எம்.ஹஸன். கொழும்பு 00900: அல் ஹஸனாத் வெளியீட்டகம், 77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (கொழும்பு 12: கொம்ப் பிரின்ட் சிஸ்டம், எச்.எல். 1/2,  டயஸ் பிளேஸ்).

xi, 156 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8841-01-3.

நவீன உளவியல் ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு, மனித உள்ளம் பற்றிய ஒரு ஆக்கத்தொடராக எளிய தமிழில் ஆசிரியர் வழங்கியுள்ளார். நவீன உளவியலானது எவ்வாறு இஸ்லாத்தை நோக்கி நகர்ந்துவருகின்றது எனபதைத் தனது கட்டுரைகளின் வழியாகப் பல இடங்களிலும் சுட்டிக்காட்டுகின்றார். எண்ணமே வாழ்வு, வாழ்க்கையில் வெற்றி, உளவிருத்திப் பருவத்தினருக்கு உதவிசெய்வோம், உளவிருத்தியை இனம்காணுவது எப்படி? தாய்மை என்றால் என்ன? தனிமனித ஆளுமையில் தாய்மையின் பங்கு, குதூகலிக்கும் குழந்தைப் பருவம், குழந்தைகளின் தேவையை அறிவது எப்படி? குழந்தை வளர்தலும் குழந்தையை வளர்த்தலும், எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, தாயுடன் முரண்படும் குழந்தை, தந்தைமை, வாழ்க்கைத் தகைமைக்கு நடத்தைப் பயிற்சி, உண்மை – உண்மையிலும் உண்மை – முற்றிலும் உண்மை, பொய்யும் மெய்யும், கற்றலுக்குக் குழந்தைகளைத் தயார் செய்தல், உளவிருத்திப் பருவத்தினருக்கு எப்படி உதவலாம்? பிள்ளைகளின் உளவிருத்தியும் விருத்தி வேகமும், பிள்ளைகளின் பள்ளிப் பருவம், அடியாத மாடு படியாது, தண்டனையா பரிசா? பரிகாரம் என்ன? பிள்ளையின் ஆன்மீக வளர்ச்சியின் அடிப்படைகள், தோளுக்கு மிஞ்சினால் தோழன், பிள்ளைகளின் பண்பாட்டு விருத்திக்கான வழிகாட்டல், குதிரையை நீர்நிலைக்குக் கொண்டுவரலாம் நீர் பருக வைக்கலாமா? ஆகிய தலைப்பகளில் எழுதப்பட்டுள்ள 26 உளவியல் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 9356). 

ஏனைய பதிவுகள்

Free Video Ports Enjoyment

Blogs Free Zero Subscription Ports Slot Bonuses and you may Gambling enterprise Offers Provides And Incentives Free Harbors Faq Gamble 100 percent free Ports Which