11057 தியான சாதனம். கவியோகி சுத்தானந்த பாரதியார்.

யாழ்ப்பாணம்: சுத்தானந்த யோக சமாசம், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).

(2), 48 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13.5 சமீ.

ஜபமாலை தொடங்கி யோக சமாஜம் ஈறாக 57 தலைப்புக்களில் ஆன்மீகக் கருத்துரைகளை சிறு கட்டுரைக் குறிப்புகளாக சுத்தானந்த பாரதியார் இந்நூலில் வழங்கியுள்ளார். சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 – மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று சைவர்களால் போற்றப்பட்டவர். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார். சுத்தானந்த பாரதியார் என பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன், தமிழகத்தின் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34371).

ஏனைய பதிவுகள்

Anmeldelser Bor Segment Million

Content Snar Afbigt Altid Aldeles Lykkelig Oplevelse Kolossal God Døgnservice Hastig Levering Og Heldig Døgnservice Udstrakt anbefaler, at man bestiller maden ligelede snart, at man