11079 புதியதோர் உலகம் காணப் புறப்பாடு.

புறப்படுகை நியாயந்தான். முட்டுக்கட்டைகள் நீங்குமா? இ.சண்முகராசா (மன்றச் செயலாளர்). திருக்கோணமலை: இளைஞர் அருள்நெறி மன்றம், ஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1989. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம்).

26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

ஆன்மீகமும் அரசியலும் தர்மநீதியை முன்வைத்துச் செல்லவேண்டும். அதிகப் பெரும்பான்மை பலம் என்ற காரணத்தால் துன்மார்க்கங்களுக்குச் சிம்மாசனம் அமைத்துவிட்டுச் சன்மார்க்கத் திருநெறிக்குத் தூக்குமேடை அமைத்துவிடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் நூல். மன்றத்தின் 24ஆவது வெளியீடாக வெளிவரும் இப்பிரசுரம் 14.01.19809 அன்று புத்தாண்டுப் பொங்கல் திருநாள் சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 726/45768).

ஏனைய பதிவுகள்

11185 அறுபது சில்லரைக் கோர்வை.

சரஸ்வதி புத்தகசாலை. கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 4வது பதிப்பு, 1964. (கொழும்பு: மெய்கண்டான்  அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). (17), 267 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 14.5×12