திருநெல்வேலி ஞானப்பிரகாசமுனிவர் (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ வித்தியாவிருத்திச் சங்கம், கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
Lvi, 270 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7347-00-4.
1889 ஆனி மாதத்தில் சென்னை சை.இரத்தினசெட்டியார் அவர்களது மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்ட மூலநூலின் மீள்பதிப்பு இதுவாகும். திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் சாலீவாடீபுரம் (கி.பி. 16ம் நூற்றாண்டில் திருநெல்வேலி இப்பெயரால் அழைக்கப்பட்டிருந்தது) ஸ்ரீமத் ஞானப்பிரகாச தம்பிரான் இயற்றிய உரையோடு மேற்படி ஆதினம் யாழ்ப்பாணம் வட்டுநகர் ஸ்ரீமத் சிவஞானதம்பிரானுடைய ஏட்டுப் பிரதிக்கிணங்க யாழ்ப்பாணம் வண்ணைநகர் ம.அமரசிங்கப் புலவரைக்கொண்டு பரிசோதித்து அவர் மாணாக்கருள் ஒருவராகிய மேற்படி நகரத்து சி.சண்முக ஐயரால் இந்த மூலநூல் வெளியிடப்பட்டிருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61689).