11086 காஷ்மீர சைவமும் சைவசித்தாந்தமும்.

தி.செல்வமனோகரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park,  1வது பதிப்பு, 2017. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

viii, 216 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-685-047-5.

பேராசிரியர் நா.ஞானகுமாரன் அவர்களின் மேற்பார்வையின்கீழ் ‘சைவசித்தாந்த, காஷ்மீர சைவ மெய்யியலமைப்பு-ஓர் ஒப்பீட்டாய்வு’ எனும் தலைப்பில் முதுதத்துவமாணி கற்கைநெறியை மேற்கொண்டு அதனை நிறைவுசெய்த ஆசிரியர் அவ்;வாய்வினையும் அதன்வழிப்பெற்ற அறிவையும் அடிப்படையாகக்கொண்டு இந்நூலை எழுதியுள்ளார். இந்திய தேசமெங்கும் பரவியிருந்த சைவம் பெருஞ் சமயமாக-தத்துவமாக அமையும் விதத்தில் தன் கட்டமைவுகளைத் தக்கவைத்துக்கொண்டது. அந்த வகையில் காஷ்மீரத்தில் நிலவிய ஒருமைவாத சைவத்தையும், தமிழ்நாட்டில் நிலவிய பன்மைவாத சைவசித்தாந்தத்தையும் ஒப்பிடுவதாக இந்நூல் அமைகின்றது. இது அறிமுகம், அறிவாராய்ச்சியியல், பதியுண்மை, பசுவுண்மை, பாசமும் அதன் வகைகளும், முக்தியும் முக்திக்கான மார்க்கங்களும், ஆகிய ஆறு பிரதான இயல்களின்கீழ் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61690).

ஏனைய பதிவுகள்

Spiele Toki Time 2000 Maklercourtage

Content Gratis Free Spins je Bestandskunden: la gran aventura Online -Slot Sic kannst respons 30 Freispiele exklusive Einzahlung im Verbunden Kasino einbehalten Gewinnlimit Casino Freispiele