சிவதொண்டன் சபை. யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 434, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு).
vii, 90 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×13.5 சமீ.
சுத்தாத்துவித சைவசித்தாந்த சமயத்தை இக்காலநிலையில் நின்று சிந்தித்து, சமகாலத் தேவைக்கும் புரிதலுக்கும் ஏற்ப சைவசமயத்தின் முதல் நூல்களின் சிரோமணியாக விளங்கும் சர்வஞானோத்தர ஆகம ஞானபாதத்தின் தமிழ் மூல உரை இதுவாகும். சைவசித்தாந்தத்தைப் பொது வகையாகக் கூறும் காமிகம் முதல் வாதுளம் ஈறாகிய இருபத்தெட்டு ஆகமங்களையும் ஸ்ரீகண்ட பரமேசுவரன் இருடிகளுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்தருளினார். சர்வ ஆகமங்களின் சாரத்தைச் சிறப்பாக எடுத்துக்கூறும் சருவஞானோத்தர ஆகமத்தை அப்பெருமான் ஸ்கந்தகுருவான சுப்பிரமணியக் கடவுளுக்கு உபதேசித்தருளினார் என்பர் ஆன்மீகப் பெரியோர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25452).