காசிவாசி செந்திநாதையர் (மூலம்), க.வச்சிரவேல் முதலியார் (உரையாசிரியர்). தமிழ்நாடு: அருள்நந்தி சிவம் அருட்பணி மன்றம், 78, செல்விநகர், சிந்துபூந்துறை, திருநெல்வேலி 627001, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (திருநெல்வேலி 627001: ரெக்சி Rexy பிரின்டர்ஸ்).
xiv, 158 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21×13.5 சமீ.
1848இல் குப்பிழான் என்னும் கிராமத்தில் பிறந்த செந்திநாதையர் 1924இல் சிவபதமடைந்தார். சைவசித்தாந்த ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, பரமத கண்டனக்காரராக செயற்பட்ட இவரின் பணிகள், குறிப்பாக சைவத்துக்கும் சைவசித்தாந்தத்திற்குமான பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சைவசித்தாந்தத்தை தெளிவுணர்த்தும் பழம்பெரும் நூல்களில் சிவஞானபோத வசனாலங்காரதீபம் தனியிடம் வகிக்கின்றது. 1916ம் ஆண்டு முதற்பதிப்பைக் கண்ட இந்த மூலநூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன், திரு.க.வச்சிரவேலு முதலியார் அவர்களால் ‘சிவஞானபோத உரைநடை விளக்கம்” என்ற தலைப்புடன் எழுதிவைக்கப்பட்டிருந்த நூல் அருள்நந்தி சிவம் அருட்பணி மன்றத்தினரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூல் சிவஞானபோதத்தின் உயர்வை மிகத் துல்லியமாக எடுத்துரைக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24070).