11091 சிவநெறிப் பிரகாசம்.

செ.கனகசபாபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசூக்குமார்த்த போதினிப் பத்திரிகாசிரியர், வேலணை, 1வது பதிப்பு, ஆடி 1917. (யாழ்ப்பாணம்: நடராஜ அச்சியந்திரசாலை, வேலணை).

(6), 42 பக்கம், விலை: 75 சதம், அளவு: 20.5×14 சமீ.

சிவநெறிப் பிரகாசம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்பரால் எழுதப்பட்ட சைவசித்தாந்த நூலாகக் கருதப்படுகின்றது. இதற்கு இவரது மாணாக்கர்கள் பலர் எழுதிய சிவநெறிப் பிரகாச உரைகள் இந்த நூலின் பெருமையை நன்கு விளக்குவதாக உள்ளது. யோகிகளின் மகள் சுவானந்த நாச்சியார் தமக்குச் சிவநெறியை உணர்த்தும்படி வேண்ட அதன் பொருட்டு சிவாகமங்களிலிருந்து தெரிந்தெடுத்த செய்திகளை 1000 சுலோகங்களில் தந்துள்ள நூல் இது. வாழ்க்கை இருளில் சிவப்பேறு அடைய வழிகாட்டும் ஒளிவிக்கு என்னும் பொருள் தருவதாய், இந்த நூலின் பெயர் ‘சிவநெறிப் பிரகாசம்’ என்று சூட்டப்பட்டுள்ளது. இந்நூலுக்கான உரைகளிலொன்றாக இப்பிரதி அமைந்துள்ளது. செ.கனகசபாபதிப்பிள்ளையவர்கள் தனக்குக் கிட்டிய நான்கு பிரதிகளை ஒப்பிட்டு இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார். நான்கு பிரதிகளிலும் இந்நூலாசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். சைவாதீனத்திலுள்ள சிவஞானச்செல்வர் ஒருவரால் செய்யப்பட்ட நூலாகவிருக்கலாம் எனக்கருதுகின்றார். மேலும் இந்நூலிலே கடவுள் வணக்கம், அளவை பதியிலக்கணம், பசுவிலக்கணம், பாசவிலக்கணம், தத்துவவியல்பு, பஞ்சமயகோசம், மும்மாயைகளினியல்புகளும் சிவதருமம் செய்வோருக்குச் சத்தினிபாதமுதிக்கும் தன்மை, தீட்சைகளின் இயல்பு, சமயபேதமும் அவரவர் கொள்கையும், முத்திக்குபாயங்கூறல்,  தசகாவியங்களிவையெனல், பஞ்சாட்சரவியல்பு, சிவபக்தி ஆன்மாக்களுக்கு உறுதிபயக்குமெனல், என்பன அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 972).

ஏனைய பதிவுகள்

17060 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 65ஆவது ஆண்டு அறிக்கை (2006-2007).

 கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: