நாகேந்திரம் கருணாநிதி. லண்டன் E6 2HD: 109, Caledon Road, East Ham, 1வது பதிப்பு, 2017. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட்).
122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி, சைவசித்தாந்தத்தைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஐரோப்பிய சைவசித்தாந்த ரத்தினப் பயிற்சி மையமாகிய லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தில் சூ.யோ.பற்றிமாகரன் அவர்களிடம் தான் கற்ற வேளையிலும், பின்னர் பல சைவசித்தாந்த நூல்களை வாசித்துத் தெளிந்தவேளைகளிலும் பெற்ற இன்பத்தின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார். சைவசித்தாந்தம் கற்க விரும்பும் மாணவர்களின் தேவைகளுக்கேற்ப எளிய நடையில் சைவசித்தாந்தக் கருத்துக்கள் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. சைவசித்தாந்தச் சுருக்கம், முப்பொருள் உண்மைகள், பதி (இறைவன்), நவதருபேதம், சிவலிங்கம், நடராஜ தத்துவம், திருவைந்தெழுத்து, பசு (உயிர், அன்மா), பாசம் (மலம் தளை), ஆணவம், கன்மம், மாயை, சைவசித்தாந்த சாத்திரங்கள் ஆகிய 13 இயல்களில் இந்நூல் விரிகின்றது. இவை லண்டனிவிருநத வெளிவரும் ‘பார்வை’ இதழ்களில் தொடராக வெளிவந்தவையாகும். தாயகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த கருணாநிதி, புலம்பெயர்ந்து லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.