கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், குணம் பதிப்பகம், பிள்ளையார் கோவிலடி, கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிரின்டர்ஸ்).
ix, 122 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ.
கிரக மாற்றங்கள், தசை, புத்தி, லக்கின பலன், இராசி பலன், கோசார பலன், சந்திர ராசிப்பலன், குரு, சனி, ராகு, கேது, மாற்றப் பலன், தினப்பலன், லக்கின வீடு முதல் 12 பாவங்களில் கிரகங்கள் நிற்கும் பலன், திருமணப் பொருத்தம் போன்ற அனைத்தையும் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். சோதிடக் கலையில் ஆர்வமுள்ளவர்களின் அடிப்படை அறிவை விருத்திசெய்வதற்கு ஏற்றவகையில் இந்நூலை உருவாக்கியுள்ளார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14774).