11103 எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்? என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?

பி.கே.சாமி. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

228 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 18×12.5 சமீ.

பொதுவாக எண் சோதிடத்தில் பிறந்த திகதி, பிறந்த மாதம், பிறந்த வருடம் ஆகியவற்றை கூட்டிவரும் எண்ணை வைத்து ஒருவரின் பலாபலன்களைக் கூறிவந்தார்கள். இந்நூலாசிரியர்  பிறந்த எண்ணுக்கும் பிறந்த ஒவ்வொரு கிழமைக்குமான கணிப்பினை வழங்கியிருக்கிறார். பிறந்த கிழமையை வைத்து ஒருவரின் யோகங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள இச்சோதிடநூலின் ஆசிரியர் இலங்கையில் சமாதான நீதவானாக கொழும்பில் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32370).

ஏனைய பதிவுகள்