11104 திருமணப் பொருத்த விதிகள்.

எம்.என்.மகேந்திரராஜா. கனடா: எம்.என்.மகேந்திரராஜா, 65, Green Crest Circuit, Apt 518, Toronto, Ontario MIG 3T9, 4வது பதிப்பு, 2012, முன்னைய பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு).

44 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 160., அளவு: 29.5×22 சமீ.

இந்து சமயத்தினரிடையே திருமணத்திற்கு ஜோதிட வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, இரச்சு ஆகியவை இருந்தால் பொதுவாக திருமணங்கள் நிகழுகின்றன. இந்த 12 பொருத்தங்களில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசியாதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய 10 பொருத்தங்களே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நூலில் கிரகப் பொருத்தம், கிரக பாப விளக்கம், செவ்வாய் தோஷம், திருமண நாள் வைத்தல், நட்சத்திரப் பொருத்த அட்டவணை ஆகியன உள்ளடங்குகிறன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் C- 13264). 

ஏனைய பதிவுகள்

Online Casino Mit 5 Euro Einzahlung

Content Download book of ra mobile: Wie Man Einen 5 Euro Bonus Ohne Einzahlung Gratis Bekommt Fazit: Gute Auswahl An Paypal Casinos Spezifischer Casino Bonus