கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (மூலம்), மாத்தளை அருணேசர் (தமிழாக்கம்). சென்னை 600 015: Mahabala Publishers and Book Sellers 18, பிராமணாள் வீதி, சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, ஜுலை 1978. (சென்னை 600 017: N.L.R.C.Printing Press, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர்).
x, 432 பக்கம், விளக்கப்படங்கள்;, விலை: இந்திய ரூபா 22., அளவு: 20.5×13.5 சமீ.
உயர்தர நட்சத்திர சோதிட முறையின்படி கணிக்கப்பெற்ற ப்ரஸ்ன்ன ஜோதிடம் பேராசிரியர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பெற்று, மாத்தளை அருணேசர் (சோதிடமணி ஆ.சிவபாதம்) அவர்களால் தமிழாக்கம் செய்யப்பெற்று நூலுருவாகியுள்ளது. ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பகுதியில் நூலாசிரியரைப் பற்றி, சோதிடம் ஒரு விஞ்ஞானமே, சோதிட சாஸ்திரத்தின் சரித்திரம், மூலசித்தாந்தங்கள் முழுமை பெற்றவை அல்ல, அதன் உபயோகமும் வரன்முறையும், சோதிட சாஸ்திரத்தின் பிரிவுகள், ஹோரை அல்லது ப்ரஸ்ன்ன ஜோதிடம், ஹோரை சாஸ்திரம் ஏன் விரும்பப்படுகிறது ஆகிய ஒன்பது தலைப்புகளின் கீழ் சாஸ்திரம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இரண்டாம் பகுதியில் ஹோரை சோதிடம், ப்ரஸ்னகியானம், உத்தரகாலாமிர்தம், ஷட்பஞ்சசீகம், சினேந்திரமாலை, பத்மபிரப்பூசுரியின் பூபன தீபகம் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியில் ஹோரை சோதிடத்தின் தொடர்ச்சியாக மேனாட்டு முறை, ஹோரை சக்கரம் அமைக்கும் நேரம், ஒவ்வொரு கிரகமும் குறிப்பிடுவது என்ன? ராசிகளும் இடங்களும், ராசிகள் நாடுகளும் நகரங்களும், கையாளும் முறைகள் பற்றி ஆசிரியரின் அபிப்பிராயம் ஆகிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் ஹோரை சோதிடத்தில் கிருஷ்ணமூர்த்தி பத்ததியின் விஞ்ஞானத் தன்மை பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் பகுதியில் ஆளும் கிரகங்கள் பற்றியும் பதினொரு பாவங்கள் பற்றியும் தனித்தனிப் பிரிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25465).