11111 பௌத்தமும் நிர்வாணமும் (தேரவாத பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டது).

இ.சகாயசீலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 59 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-540-6.

கௌதம புத்தரும் பௌத்த தத்துவமும், தேரவாத பௌத்தம் குறிப்பிடும் நிர்வாண மார்க்கம், அருகத நிலை (Arhatship), நிர்வாணம் ஆகிய நான்கு பிரதான பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒப்பீட்டுச் சமயம், மெய்யியல் போன்றவற்றை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பௌத்த மெய்யியல் தொடர்பான தகவல்களைத் தேடும் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ள நூலாக இது அமைகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான நூலாசிரியர் ஒப்பீட்டுச் சமய சமூக நல்லுறவுக் கற்கைகள் துறையின் துறைத்தலைவராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61426).

ஏனைய பதிவுகள்