சி.பத்மநாதன் (பிரதம பதிப்பாசிரியர்), கொழும்பு 2: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன கட்டிடம், 9வது மாடி, 21, வொக்ஷால் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (கொழும்பு 14: இம்பீரியல் அச்சகம், 315 கிரான்ட்பாஸ் ரோட்).
(14), 198 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 27.5×21.5 சமீ.
இந்து சமயத்துக்கானதொரு பல்தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது இரண்டாவது தொகுதியாகும். இதில் சிறியதும் பெரியதுமான 400 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் எழுத்தாளர் குழுவில் பேராசிரியர் சி.பத்மநாதன், வித்துவான் க.ந.வேலன், பண்டிதர் கா.செ.நடராசா, புலவர் த.கனகரத்தினம், வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன், கலாநிதி சொ.கிருஷ்ணராசா, திரு.எஸ்.மகேஸ்வரன் திரு. ந.வேல்முருகு, திருமதி மைதிலி தயாநிதி, திருமதி சாந்தி நாவுக்கரசன், திரு. சீ. தெய்வநாயகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.