11142 சைவ சமய போதினி: நான்காம் வகுப்பு.

குரும்பசிட்டி சன்மார்க்க சபை. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 5ஆம் பதிப்பு, 1960, 1வது பதிப்பு, 1956, 2வது பதிப்பு, 1957, 3வது பதிப்பு, 1958, 4வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(8), 60 பக்கம், சித்திரங்கள், விலை: 80 சதம், அளவு: 18×13.5 சமீ.

இலங்கை அரசாங்கத்தின் கல்வித்திட்டத்திற்கு அமைவாக சைவ சமயம் கற்பிப்பதற்காக வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம் சைவ சமய போதினி என்ற தொடரில்  நான்கு பாடநூல்களை வெளியிட்டது. அதில் ஒன்றாக நான்காம் வகுப்புக்கேற்ற இந்நூல் அமைகின்றது. நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பகுதியில்  சிவபெருமானை வழிபட்ட சிலந்தி, குங்கிலியக்கலய நாயனார்-1, குங்கிலியக்கலய நாயனார்-2, பாலாபிடேகஞ் செய்த சிறுவன்,  சிவபெருமான் தாயானமை, கிரிசாம்பாள், பொன்னனையாள், சிபிச் சக்கரவர்த்தி, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆகிய ஒன்பது பாடங்களும், இரண்டாம் பகுதியில்  சிவாலய தரிசனம், சரியை வழிபாடு, கோவிலைச் சுத்தம் செய்தல், கோவிற் பூந்தோட்டம் ஆகிய நான்கு பாடங்களும், மூன்றாம் பகுதியில்  திருஞான சம்பந்த சுவாமிகள் தேவாரம், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், புராணம், திருப்பகழ் ஆகிய ஐந்து பாடங்களும், நான்காம் பகுதியில் மூதுரையுமாக மொத்தம் 19 பாடங்கள் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13361).

ஏனைய பதிவுகள்