தெ.ஈஸ்வரன் (ஆசிரியர்). கொழும்பு 3: Chinmaya Mission of Sri Lanka, 32, 10th Lane, Off Schofield Place, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-38349-0-7.
கண்டி-நுவரெலிய பிரதான வீதியில் இரம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் கோவில் உள்ளது. அக்கோவிலின் வரலாற்றுப் பெருமையை இந்நூல் பன்னிரு இயல்களில் பதிவு செய்கின்றது. சின்மயா மிஷன் கண்விழிக்கிறது, காக்க நீ இருக்கப் பயம் ஏன்?அனுமன் கோவில் கட்ட ஆணை தந்தான், அனுமன் கர்நாடக இசை கேட்டான், கம்பன் தரும் காட்சி, மலையகத்தில் வசூல், அனுமன் இலங்கை வந்தனன், பக்த ஆஞ்சநேயன் சிறிய உருவில் குடிகொண்டார், கேட்டால் தருவான் மாருதி, ஸ்ரீ வரதராஜ விநாயகர் வந்தார், அனுமனுக்கு குடமுழுக்கு விழா, ஆஞ்சநேயன் குடிகொண்டான் ஆகிய தலைப்புகளில் இந்நூல் இரம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் கோவில் எவ்வாறு கட்டப்பட்டது என்பதையும் 2001இல் கும்பாபிஷேகம் நிகழ்ந்தது வரையிலான வரலாற்றையும் பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61613).