11150 திருக்கேதீச்சர மான்மியம் 2: பொற்பொளிர் காண்டம்.

மு.கந்தையா. மன்னார்: திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, சிவானந்த குருகுலம், திருக்கேதீச்சரம், 1வது பதிப்பு, ஜுன் 1992. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை).

viii, 201 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 23×15 சமீ.

திருக்கேதீச்சர மான்மியம் ஆறு காண்டங்களாக எழுதப்பட்டது. புராதன காண்டம், பொற்பொளிர் காண்டம் என்பவை திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபையால் சிவானந்த குருகுல வெளியீடாக வெளிவந்தன. கரந்துரை காண்டம், நித்திய நைமித்திய காண்டம் இரண்டம் திருப்பணிச்சபையால் வெளியிடப்பட்டன. மற்றைய இரு காண்டங்கள் பற்றிய தகவல் இல்லை. இவ்விரண்டாம் பாகத்தில் சேத மத்தியமகிமையுரைத்த படலம், மாதேவடிகள் காட்சிப் படலம், சீகாழிப்பிள்ளை திருப்பதிகப் படலம், நாவலூர் நம்பி நற்றமிழ்ப் படலம், புலநரவைப் படலம், இராஜராஜபுரப் படலம், இராஜராஜேஸ்வரப் படலம், கும்பாபிஷேகப் படலம்,  திருவிராமீஸ்வரப் படலம், சிலாசாசனப் படலம் ஆகிய இயல்களின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13304).

ஏனைய பதிவுகள்

Spinpalace Au Casino Review 2022

Content ¿es Defato Posible Ganar Con Un Bono Sin Armazém? – Magic Spins $ 1 depósito Spinbetter Casino Sem Bônus Infantilidade Armazém 150 Rodadas Acessível