இ.குமாரசாமி சர்மா. யாழ்ப்பாணம்: இ.குமாரசாமி சர்மா, 15, பீ.ஏ.தம்பி லேன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: லக்ஷா பிரிண்டேர்ஸ்).
68 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளதும், 27.11.1966இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 06.06.1968இல் மகாகும்பாபிஷேகம் கண்டதுமான குறிஞ்சிக் குமரன் ஆலயம் பற்றிய ஆக்கங்களைத் தாங்கி வெளிவந்துள்ள நூல். குறிஞ்சிக் குமரனின் பண்பாட்டு வரலாற்றை, அது எதிர்கொண்ட நெருக்கடிகளையெல்லாம் தாண்டி, நிமிர்ந்து நிற்கும் கோவிலின் மாட்சியை அதன் உயிர்ப்புடன் இணைந்திருந்த உன்னதங்களை, தனது பெறுமதியான மாணவப் பருவ மனப்பதிவுகளோடு ஆசிரியர் தந்திருக்கிறார். முருகன் திருவருட் பொலிவும் பேராதனை மாட்சியும், மாணவரின் அயராத முயற்சி, கோவிலும் சூழலும், அடிக்கல் நாட்டு வைபவம், அறுபடை வீடுடைய முருகன் வரலாறு, முருகன் அருள் பெருக்கும் திருவுலா, மஹா கும்பாபிஷேகம், ஆலய சிற்ப ஓவிய அமைப்பு, நித்திய நைமித்திய கிரியைகள், கோயில் எழுப்பினோர், கோயிலின் எதிர்காலம், இறைவனுக்குரிய நிவேதனப் பொருட்கள் விபரம், ஒரே இறைவனின் பல்வேறு தோற்றங்கள், முருகன் மீது பாடப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு ஆகிய 14 தலைப்புகளின்கீழ் இந்நூல் பேராதனை குறிஞ்சிக் குமரன் ஆலயம் பற்றிய பல்வேறு தகவல்களையும் தருகின்றது.