ப.சதாசிவம் (ஆசிரியர்), நா.சுந்தரானந்தம் (அருட் பாடல்கள்). வவுனியா: ஆலய பரிபாலன சபையினர், இயங்கராவூர், பூவரசங்குளம், 1வது பதிப்பு, 2013. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).
44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
வவுனியாவில் உள்ள இயங்கராவூர்பதி என்ற சிற்றூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விக்னேஸ்வரர் கண்ணகை அம்பிகை, வீரபத்திரக் கடவுள் நரசிங்கமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த பொங்கலை முன்னிட்டு வெளிவந்துள்ள இம்மலரில் அவ்வாலயத்தின் வரலாறும், அதன் தல வரலாறும் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.