பி.கிருஷ்ணசாமி (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம், 4. சம்னர் பிளேஸ், 1வது பதிப்பு. 1978. (கொழும்பு 12: சீ.என்.பீ. அச்சகம்).
130 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
சற்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் ஜெயந்தி விழா 18.1.1978 அன்று புதன்கிழமை, கொழும்பு 4, புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற வேளை வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆன்மீகக் கட்டுரைகள், மற்றும் பல்வேறு சமாஜச் செய்திகளையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளது. சமாஜத்தின் ஸ்தாபக போஷகராக ஸ்ரீ சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள் இயங்குகின்றார். தெய்வீகப் பிரச்சாரங்கள், மாணவர்களையும் இளைஞர்களையும் ஆன்மீகப் பணிகளில் ஊக்குவித்தல், மருத்துவ உதவி வழங்கல், அநாதை ஆச்சிரமங்களை அமைத்துப் பராமரித்தல், சமூக தெய்வீக ஆன்மீகத் தொண்டுகள் செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு இந்தச் சமாஜம் இயங்குகின்றது. இம்மலரில் ஞானமலை (கி.வா.ஜ), ஸ்ரீ சற்குரு மகிமை (ந.பிச்சமணி ஐயர்), தமிழ் வாழ் பழநி (புத்தனேரி ரா.நடராசன்), குஹ தத்துவம் (ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ஞானானாந்தகிரி சுவாமிகள்), சுயநலம் வாழ்க (பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை), எம் குருதேவர் (ஸ்வாமி ஹரிதாஸ்), கண்ணன் சொன்னதென்ன கீதையிலே, அருட் சுவை (கி.ஆ.பெ.விசுவநாதம்),ஓம் நமோ நாராயணாய, ஹரிநாமம். தோத்திரப்பிரியன் (சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி), ஸ்ரீ ஸத்குரு ஞானானந்த தசகம், THE BEACON-LIGHT AT THE THAPOVANAM (V.Sivasupramnaiam), கருணையின் வடிவம், சமயம் வளர்த்த சமுதாயம் (நா.முத்தையா), காஞ்சி காமகோடி சுவாமிகளின் தெய்வத்தின் குரலிலிருந்து, இசையும் சமயமும் (திருமதி.பாலம் லக்ஷ்மணன்), இசை இன்பம் (யோகி சுத்தானந்த பாரதியார்), முரகனழகு (சுசிலா தெ.மூர்த்தி), இந்து சமய மலர்ச்சி (வ.சிவராசலிங்கம்), நாட்டியத்தின் ஆன்மீக அடிப்படை (ஸ்ரீமதி ருக்மினி தேவி), ஆலயத்துள் நுழைவது போல (பாலசரஸ்வதி), இஸ்லாம் காட்டும் ஆத்மீக விடுதலை (K.M.P.முகம்மது காசிம்), A COMMONWEALTH OF GOD (S.Ranakrishnan), பழனி ஆண்டவர் அம்மானை (ரா.முருகேசு கவிராயர்), கீதை: ஒரு நடைமுறைத் தத்துவம் (நா.சுப்பிரமணியம்), உள்ளது ஒன்றே (பிரதிஷ்ட பூஷணம் நயினை சிவஸ்ரீ ஐ.கைலாசாநாத குருக்கள்), என் உள்ளத்தே எழுகின்ற ஞாயிறே போன்று (திருமதி இ.ஸ்ரீஸ்கந்தராஜா சிவயோகம்), பழனிக்குப் புதிய அழகு (கவிஞர் கண்ணதாசன்), பணிவு (சிவஞானவாரிதி கு.குரசாமி), சரணாகதித் தத்துவம் (கே.வி.எஸ்.வாஸ்), பாத மஹிமை (ஸ்வாமி பாத ஸேவாநந்தா), கந்தவேள் கருணை – திரு அருட்பா, திருப்புகழ் சிறப்பு (சே.த.இராமலிங்கம் பிள்ளை), அருள்வாய் முருகா அருள்வாயே (சௌந்தரா கைலாசம்), ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம் 1977 வரவு செலவு கணக்கு விபரம் ஆகிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13696).