வை.க.சிற்றம்பலம். இணுவில்: முருகேசு வேலாயுதபிள்ளை, விநாயகர்பதி, மஞ்சத்தடி, 1வது பதிப்பு, தை 1990. (அளவெட்டி: ஸ்ரீமகள் பதிப்பகம்).
10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தின் இணுவையம்பதியின் கிழக்கேயமைந்த அரசோலைப் பகுதியில் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் கறபனை விநாயகர் (அரசோலைக் கற்பக விநாயகர் எனவும் அழைப்பர்) பேரில் பாடப்பெற்ற திருப்பொன்னூஞ்சல் இதுவாகும். முதுபெரும்புலவர் வை.க.சிற்றம்பலம் இணுவில் கிராமத்தில் 1914ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ம் திகதி பிறந்தவர். இணுவிலில் பிறந்தாலும் அளவெட்டி மண்ணில் மணம் முடித்து அளவெட்டியிலேயே நிரந்தரமாக வாழ்ந்துவந்தவர். புலவர் அவர்களுக்கு 2002ம் ஆண்டு இலங்கை அரசின் இந்து கலாச்சாரத் திணைக்களம் கலாபூசணம் விருது வழங்கி கௌரவித்தது. இவர் தனது 101ஆவது வயதில் 02.11.2015 இல் அமரத்துவமடைந்தார். அவரது வாழ்நாட்காலத்தின் பின்னரைப் பருவத்தில் பல்வேறு பக்தி இலக்கியங்களையும் வடித்துத் தமிழுக்குப் பெருமைசேர்த்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12666).