11204 கந்தர் அநுபூதி.

T.A.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார். சுன்னாகம்: இசைவாணர் நா.ப.பாலசந்திரன், தருமரகம், 1வது பதிப்பு, 1956.

x, 60 பக்கம், விலை: இந்தியக் காசு 12 அணா, அளவு: 19×11.5 சமீ.

இசை அமைப்போடு சுரதாளம் அமைத்தவர் வேலூர் T.A சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்களாவார். கந்தரனுபூதி அல்லது கந்தர் அனுபூதி என்னும் நூல் அருணகிரிநாதர் என்பவரால் பாடப்பட்டது. இவர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். அனுபூதி என்னும் சொல்லினை அனு ூ பூதி என்று பிரிக்கலாம். ‘அனு’ என்பது அனுபவம். ‘பூதி’ என்பது புத்தி. இது அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. எல்லாப் பாடல்களுமே ‘நிலைமண்டில ஆசிரியப்பா’ வகையில் எழுதப்பட்டிருப்பதனை காண முடிகிறது. எனவே ஒவ்வொரு பாடலும் 4 அளவடிகள் கொண்டு, ஆசிரியச்சீர்கள் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த நூலில் 51 பாடல்கள் உள்ளன. பாடல்கள் எதுகைத் தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன. இவற்றோடு மேலும் சில பாடல்களைச் சேர்த்து 105 பாடல்கள் கொண்ட பதிப்புகளும் உள்ளன. இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேண்டும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது. இந்த நூலில் முருகனின் திருவுரு, ஊர்தி, படை, கொடி முதலானவை கூறப்படுகின்றன. ஈதல் இந்த நூலில் வலியுறுத்தப்படுகிறது. பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 904).

ஏனைய பதிவுகள்

Как возникало «Русское игра»

Content Счастливы вне меня? Беру поздравления! В случае чего, за облаками вдобавок есть чего выиграть. Всем фортуны! А как бацать во Российское лото Бинго-75: оригинальности