11208 கனகைவிநாயகர் பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்).

வ.சிவராசசிங்கம் (நூலாசிரியர்), க.கணபதிப்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: பிள்ளைக்கவி வ.சிவராசசிங்கம், 1வது பதிப்பு, ஐப்பசி 2009. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செட் பிறின்டர்ஸ், நாவலர் மடம்).

v, 62 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.

அரச மொழி கருமத் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற உதவி ஆணையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் (ஆங்கில இலக்கியம்) பணியாற்றிய பிள்ளைக்கவி வ.சிவராசசிங்கம் படைத்துள்ள பிள்ளைத்தமிழ் இலக்கியம் இது. இச்செய்யுள்களுக்கான உரையை சிலேடைக் கவிரத்தினம் க.கணபதிப்பிள்ளை வழங்கியுள்ளார். பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் எழுந்த பிரபந்தங்களுள் ஒன்று. சிவனைத் தவிர்ந்த பிற தெய்வங்கள் மீதும், மக்கள் மீதும் பிள்ளைத் தமிழ் பாடுதல் மரபு. பாட்டுடைத் தலைவனை குழந்தையாகப் பாவித்து வெவ்வேறு பருவங்களில் அக்குழவி புரியும் குறும்பையும் ஆடல்களையும் கண்டும் கேட்டும் உணர்ந்தும் மகிழ்ந்தும் சித்திரிப்பதே இவ்விலக்கியம். அவ்வகையிலமைந்த கனகை விநாயகர் பிள்ளைத்தமிழும் காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றிற் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் ஆகிய பருவங்களை முன்வைத்துப் பாடப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47940).

ஏனைய பதிவுகள்