11215 கோயிற் புராணம்.

உமாபதி சிவாசாரியார் (மூலம்), ஆறுமுக நாவலர் (புத்துரை). சிதம்பரம்: விசுவநாதபிள்ளை, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 3வது பதிப்பு, மார்கழி 1922, முதற் பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை).

(6), 525 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×12.5 சமீ.

இரணிய வன்மச் சருக்கம் (142 பக்கங்கள்), திருவிழாச் சருக்கம் (215 பக்கங்கள்), நடராசச் சருக்கம் (103 பக்கங்கள்), பதஞ்சலிச் சருக்கம் (43 பக்கங்கள்), பாயிரம் (2 பக்கங்கள்), வியாக்கிரபாதச் சருக்கம் (20 பக்கங்கள்), ஆகிய ஆறு சருக்கங்களாகப் பிரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்தும் புத்துரையாத்தும் புதியதாய் எழுதியும் பதிப்பித்த நூல்கள் ஏறத்தாழ அறுபத்துமூன்று எனத் தெரியவருகிறது. அவற்றுள் நிகண்டு, இலக்கிய இலக்கண நூல்கள், திரட்டுகள், நீதிநூல்கள், போன்றவையும் அடங்கும். அப்பதிப்புகளைத் தொகுப்புப் பதிப்பு, சுருக்கப் பதிப்பு, குறிப்பெதிர் பதிப்பு, எனமூன்று வகைக்குள் அடக்கலாம். தொகுப்பு பதிப்பாவது ஒருவருடைய அல்லது பலருடைய படைப்புகளிலிருந்து சில பகுதிகளைத் தொகுத்துத் தருவதாகும். அகத்தியர் அருளியத்தேவாரத் திரட்டு, தாயுமானவ சுவாமிகள் திருப் பாடல் திரட்டு, நீதிநூல் திரட்டுஎன்பன. தொகுப்புப் பதிப்புகளாகும். ஒரு நூலினது மூலத்தை மட்டும் அல்லது நூற்பொதிகருத்துகளைப் பக்க அளவால் சுருக்கி வெளியிடுதல் சுருக்கப் பதிப்பாகும். இலக்கணச்சுருக்கம், இலக்கண வினா விடை, பால பாடம், போன்றவற்றைச் சுருக்கப் பதிப்பிற்குஎடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். அருஞ்சொற்பொருள், இலக்கணக்குறிப்பு பாடவேறுபாடு போன்றவற்றை அடிக்குறிப்பாகத் தந்து நிற்பவை குறிப்பெதிர்பதிப்புகளாம். சேது புராணம், கந்தபுராணம், திருக்குறள்,  சூடாமணி போன்ற இவர்தம்பெரும்பான்மை நூல்கள் குறிப்பெதிர் பதிப்புகளேயாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1241).

ஏனைய பதிவுகள்