வை.க.சிற்றம்பலம். அளவெட்டி: கவிஞர் வை.க.சிற்றம்பலம், ஆசிரியர், 1வது பதிப்பு, 1994. (சுன்னாகம்: நீரஜா அச்சகம்).
14 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 20.5×13.5 சமீ.
சிவநெறிப் புலவர் வை.க.சிற்றம்பலம் அவர்கள் இயற்றிய இணைமணி மாலை என்ற இப்பனுவல் வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய இரண்டும் இணைந்துவரப் புனையப்பட்டது. அந்தாதித் தொகையாக அமைந்துள்ளது. நல்லூர் முருகன் மீது அவர் கொண்ட ஆரா அன்பு அவர் கவிதைக்கு ஊற்றமாக விளங்குகின்றது. நூறு பாக்கள் கொண்டு நல்லூரானைப் போற்றுகின்றார். முத்தும் பவழமும் பொருந்தப்பெற்ற இணை மணி மாலைபோன்று வெண்பாவினாலும் கட்டளைக் கலித்துறையாலும் நல்லூரானுக்கு இணைமணிப் பாமாலை புனைந்துள்ளார். குரு வணக்கமாக இரண்டு பாடல்களும் அவையடக்கமாக ஒரு பாடலும் பாடி, நூலினைத் தொடக்குகின்றார். நல்லூர் என்னும் தலைத்தின் தன்மை பற்றி முதலாவது பாடலில் கூறுகின்றார். இறைவனிடம் வேண்டுதல் செய்யும் கவிஞர் இன்று மக்கள் படும் துயரையும் எண்ணி எல்லோருக்குமாக அவனை வேண்டுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34944).