11242 பிரஹ்மஸ்ரீ தாளையான் சற்குருநாதன் தோத்திரமும் உரையும்.

பொன்.அ.கனகசபை (உரையாசிரியர்). கொழும்பு: தாளையான் புக்கறா (சாதுக்கள்) டிறஸ்டிகள், 2வது பதிப்பு, ஒக்டோபர் 1988, 1வது பதிப்பு, ஜுன் 1967. (கொழும்பு 12: தாளையான் அச்சகம், 115 மெஸெஞ்சர் வீதி).

(8), 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தென் இந்தியாவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘நம்புதாளை’ என்ற ஊரில் பிரஹ்மஸ்ரீ செய்குநெய்னா முஹம்மது (தாளையான் சுவாமி) அவதரித்தார். 12 ஆண்டுகள் முத்துப்பேட்டையில் நிஷ்காமிய தவமியற்றிய பின்னர் கொழும்புக்கு வந்து இங்கே நிரந்தரமாகக் குடியேறினார். அவரை ‘கொழும்பாண்டவர்கள்’ என்று இன மத பேதம் கடந்து மக்கள் ஆன்மீக வழியில் பின்பற்றினார்கள். அடியார்கள் சமயம் கடந்த ‘மோன சமரஸம்’ எத்தகையதென்ற அனுபூதிவாய்க்கப் பெற்றார்கள். கொழும்பில் சாதுக்களும் பக்கீர்களும் வாழ்வதற்கென ‘தாளையான் அச்சகத்தை’ சுவாமிகள் உருவாக்கினார். அவர் 1955 ஓகஸ்ட் 3ம் திகதி கொழும்பிலேயே மகாசமாதியை அடைந்தார்கள். இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகாமையில் கந்தவளை என்னும் பூங்காவில் வணக்கத்துக்குரிய அவரது சமாதி உள்ளது. தாளையான் சுவாமிகளின் அடியார்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய தோத்திரப் பாக்களைத் தொகுத்து ‘பிரஹ்மஸ்ரீ தாளையான் சற்குருநாதன் தோத்திரம்’ 1967இல் வெளிவந்தது. அதிலுள்ள பாக்களுக்கு புங்குடுதீவுப் பண்டிதர் வித்துவான் பொன். அ.கனகசபை அவர்களால் உரையெழுதப்பட்டு இரண்டாவது பதிப்பாக இந்நூல் உரையுடன் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2453).

ஏனைய பதிவுகள்