சி.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: சி.கணபதிப்பிள்ளை, தமிழாசிரியரும் சோதிடரும், அட்டப்பள்ளம், 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).
(28), xvi, 247 பக்கம், விலை: ரூபா 5.50, அளவு: 21.5×14 சமீ.
பூர்வகாலம் முதல் வாய்மொழிமூலமாகவும் ஓலைச்சுவடிகள் மூலமாகவும் கோவில்களில் சேமித்து வைத்திருந்த தேவ வழிபாட்டுப் பத்ததிகளிலுள்ள கிழக்கிலங்கைக் கவிதைச் செல்வங்கள் இவை. பல ஏடுகளைச் சேகரித்துப் பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் (திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)அணிந்துரையுடன் கூடியது. இத்தொகுப்பில் மாரியம்மன் சரிதை, விநாயகர் காப்பு, பிள்ளையார் பிரார்த்தனை, எக்கலாதேவி அம்மன் பிரார்த்தனை, சரஸ்வதி பிரார்த்தனை, பராசக்தி அகவல், மாரியம்மன் தவநிலை, மாரியம்மன் அகவல், மாரியம்மன் காவியம், முத்துமாரி காவியம், சிங்காரபுர மாரியம்மன் காவியம், கல்லாற்று மாரியம்மன் காவியம், பூங்காவனத் தாயார் தாலாட்டு, சிவமுத்துமாரி தாலாட்டு, மாரியம்மன் ஊஞ்சல், மாரியம்மன் திருக்குளுத்தி, மாரியம்மன் வீதியுலா, மாரியம்மன் அம்மானையாடல், மாரியம்மன் குளிர்ந்தருளல், மாரியம்மன் வாழிப்பாடல், கடல்நாச்சி அம்மன் காவியம், கடல்நாச்சி அம்மன் பள்ளு, கண்ணகை அம்மன் பிரார்த்தனை, தம்பிலுவில் கண்ணகை அம்மன் காவியம், கண்ணகை அம்மன் அகவல், அங்கணாமைக்கடவை கண்ணகை அம்மன் காவியம், வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் தோத்திரம், வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் காவியம், பட்டிமேட்டுக் கண்ணகை அம்மன் காவியம், பட்டிமேட்டுக் கண்ணகை அம்மன் மழைக் காவியம், பொற்புறாவந்த காவியம், தாண்டவன்வெளிக் கண்ணகை அம்மன் காவியம், கறுப்பாகி அம்மன் தோத்திரம், காமாட்சி அம்மன் தோத்திரம், மீனாட்சி அம்மன் தோத்திரம், நவகோடி சக்தி தோத்திரம், பேச்சியம்மன் துதி, பேச்சியம்மன் அகவல், பேச்சியம்மன் காவியம், பேச்சியம்மன் தாலாட்டு, திரௌபதி அம்மன் துதி, திரௌபதி அம்மன் தாலாட்டு, திரௌபதி அம்மன் புலம்பல், விஷ்ணு தியானம், ஐயனாரகவல், திரௌபதி அம்மன் காவியம், திருமகள் பிரார்த்தனை, விஷ்ணு அகவல், ஸ்ரீராமர் காவியம், ஐயனார் காவியம், நாகதம்பிரான் பிரார்த்தனை, நாகதம்பிரான் காவியம், அங்காள பரமேஸ்வரி தோத்திரம், பத்திரகாளி அகவல், காளியம்மன் காவியம், காளியம்மன் பஞ்சகம், காளியம்மன் தாலாட்டு, கடல்நாச்சி அம்மன் குளுத்தி, கடல்நாச்சி அம்மன் உலா, கடல்நாச்சி அம்மன் குளிர்ந்தருளல் ஆகிய கவிதைச் செல்வங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18354).