11249 மாவைப் பிள்ளைத் தமிழ்.

மு.கந்தையா. மாவிட்டபுரம்: முத்தமிழ்க் கலை மன்றம், மாவை ஆதீனம், 1வது பதிப்பு, 1967. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xxiv, 168 பக்கம், தகடுகள், விலை: ரூபா 2.50, அளவு: 19×13 சமீ.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் எழுந்த பிரபந்தங்களுள் ஒன்று. சிவனைத் தவிர்ந்த பிற தெய்வங்கள் மீதும், மக்கள் மீதும் பிள்ளைத் தமிழ் பாடுதல் மரபு. பாட்டுடைத் தலைவனை குழந்தையாகப் பாவித்து வெவ்வேறு பருவங்களில் அக்குழவி புரியும் குறும்பையும் ஆடல்களையும் கண்டும் கேட்டும் உணர்ந்தும் மகிழ்ந்தும் சித்திரிப்பதே இவ்விலக்கியம். மாவிட்டபுரம் கந்தனைப் பிள்ளையாகக் கண்டு காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வாரானைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றிற் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் ஆகிய பத்து அத்தியாயங்களில் பிள்ளைத்தமிழ்ச் செய்யுள்கள் தரப்பட்டுள்ளன. முன்னதாக மாருதப்புரவீக வல்லியும் மாவிட்டபுரமும் என்ற சுருக்கமான வரலாற்றுக் கட்டுரையும்  இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34108).

ஏனைய பதிவுகள்