11265 என் நோக்கில் இஸ்லாம்.

சு.வித்தியானந்தன். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (சென்னை-01: புஸ்ரா ஏஜென்சீஸ்).

(8), 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் இஸ்லாம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளும், ஆற்றிய உரைகளும் இந்நூலில் ஒன்பது இயல்களின்; வழியாகப் பதிவுபெறுகின்றது. இவை அன்பின் வழி,  இஸ்லாமியக் கலையும் பண்பும், இஸ்லாமியரும் தமிழிற் புதிய பிரபந்த வகைகளும், இஸ்லாமிய நாடோடிப் பாடல்கள், இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு, நாச்சியார் மான்மியம், உயிர்நாடி-தமிழ், புத்துணர்வு, முஸ்லிம்களும் தமிழும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. இது கல்ஹின்ன தமிழ் மன்றத்தின் 60வது வெளியீடு. இந்நூலுடன் தன் 60வது வெளியீட்டை நினைவுகூரும் வகையில் கல்ஹின்ன தமிழ்மன்றம் வைரமலர் ஒன்றினையும் வெளியிட்டிருந்தது. பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இம்மலர் அமைந்திருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13376).

ஏனைய பதிவுகள்

Игры в онлайн-казино – преимущества и особенности

Содержимое Преимущества онлайн-казино Безопасность игрового процесса Защита данных игроков Честность игр Разнообразие игровых автоматов Бонусы и акции для новых игроков Удобство игры с мобильных устройств

11829 கொட்டியாபுரத்து சிங்கம்: வரலாற்றுக் குறுநாவல்.

சம்பூர் ஸதீஸ் (இயற்பெயர்: அருமைநாதன் சதீஸ்குமார்). திருக்கோணமலை: அ.சதீஸ்குமார், 246, முருகன் கோவில் வீதி, இலிங்கநகர், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பிரின்டர்ஸ்). 79 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5