11266 காற்றில் செதுக்கிய கருவூலங்கள்: தூதர்வழித் தூய மொழி.

ஆ.மு.ஷரிபுத்தீன் (மூலம்), லுணுகலை ஸ்ரீ (தொகுப்பாசிரியர்). மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு. மே 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 87 பக்கம், விலை: ரூபா 400., 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0112-03-5.

புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் 574 வெண்பாக்களின் தொகுப்பினை அன்னாரது 108ஆவது அகவையை முன்னிட்டு அன்னை வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள், வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் திருநபி வாய்மொழிகளை (ஹதீஸ்) கிடைத்தபோதெல்லாம் அதனை செய்யுளாக எழுதியும், எழுத இயலாதபட்சத்தில் பிறரைக்கொண்டோ பதிவு செய்து வைத்திருக்கிறார் அமரர்  ஷரிபுத்தீன். இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சிகளின்போது கூறப்படும் ஹதீஸ்களை வைத்து அன்றன்றே படுக்கைக்குப் போகும்வேளைகளில் எளிமையான செய்யுள் வடிவில் அவற்றை எழுதிவைத்துவிடுவார். அத்தகைய 1500 கருவூலங்களில் இருந்து தேர்ந்து 574 செய்யுள்களை இந்நூலாக்கத்திற்கு லுணுகலை ஸ்ரீ  பயன்படுத்தியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12180 – வழிபாட்டுத் திரட்டு.

கா.சிவபாதசுந்தரம் (தலைவர்). யாழ்ப்பாணம்: தையிட்டி இந்து இளைஞர் சங்கம், தையிட்டி, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சு நிலையம்). 72 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. தையிட்டி, இலங்கையின்

13161 நக்கீரம் 1997.

பாலச்சந்திரன் கௌதமன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி