எம்.ஏ.நுஃமான் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
166 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ., ISSN: 1391-7269.
கொழும்பு, சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் ஆய்வேடாக வருடமிருமுறை வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் குழுவில் என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு, செல்வி திருச்சந்திரன் ஆகியோர் பணியாற்றினர். இவ்விதழில் உலகமயமாக்கலும் மனித சுதந்திரமும் (என்.சண்முகரத்தினம்), உள்முற்றம்: இலங்கையில் சாதி, நீதி, சமத்துவம் பற்றி அரசியல் சொல்லாடல் (ஜயதேவ உயங்கொட), இலங்கையில் இன முரண்பாடும் சமாதானத் தீர்வு முயற்சிகளும்: ஜ.பார்த்தசாரதி முதல் எரிக் சொல்ஹெய்ம் வரை (அ.சிவராஜா), மனச்சாட்சியின் மரணமும் இனவாத அரசியலும் (செல்வி திருச்சந்திரன்), இலங்கையில் முஸ்லிம் சட்டமும் பெண்ணுரிமை விவாதங்களும் (சுல்பிகா), குடிசன மதிப்பீட்டைப் பன்மைப்படுத்துதல் (தரணி ராஜசிங்கம் சேனநாயக்க), முடிவற்ற நீதியின் அட்சரகணிதம் (அருந்ததி ராய்), அடிப்படைவாதம் பற்றிய பிரச்சினை (உம்பெட்டோ ஈக்கொ), தமிழ் மொழிபெயர்ப்பில் சிங்கள இலக்கியம் (எம்.ஏ.நுஃமான்), சாதுக்களின் படை (நிரூபமா சுப்ரமணியம்), நூல் மதிப்புரை- இனமுரண்பாடும் வரலாற்றியலும் (கா.சிவத்தம்பி), பெண்களின் கொள்கை அறிக்கை ஆகிய பன்னிரு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25653).