எம்.ஏ.நுஃமான் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர்; 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
116 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ., ISSN: 1391-7269.
கொழும்பு, சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் ஆய்வேடாக வருடமிருமுறை வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் குழுவில் என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு, செல்வி திருச்சந்திரன் ஆகியோர் பணியாற்றினர். இவ்விதழில் கறுப்பு ஜுலையை நினைவுகூர்தல் (எம்.ஏ.நுஃமான்), கூகியும் ஆபிரிக்க இலக்கியமும் (எஸ்.வி.ராஜதுரை), பேனா முனைகள், துப்பாக்கி முனைகள், கனவுகள் கூகி வா தியாங்கோவுடன் பேட்டி, சிலுவையில் தொங்கும் சாத்தான் (கூகி வா தியாங்கோ), கருச்சிதைக்கப்பட்ட புரட்சி (நவால் எஸ்.ஸாதவி), நேபாள மக்கள் யுத்தத்தில் பெண்களின் தலைமைத்துவப் பிரச்சினை (பார்வதி கந்தசாமி) ஆகிய ஆறு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31453).