சி.சந்திரசேகரம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சு.சிவரெத்தினம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆனி 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 77 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 24.5×17.5 சமீ.,ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது நான்காவது இதழில், மேற்காசிய இசை: தொன்மையும், மரபுகளும் (ம்.எஸ்.எம்.அனஸ்), உலகளாவிய ஆய்வுமுறையியல்: தமிழ்ச் சூழலுக்கான சில குறிப்புகள் (ஞா.ஸ்டீபன்), தேர்தல் சீர்திருத்தங்களும் அரசியற் சிறுபான்மையினரும் (சி.சிவசேகரம்), ஈழத்தில் இறப்புத் தொடர்பான கல்வெட்டு மரபு (க.இரகுபரன்), இந்திய தத்துவ மரபில் சடப்பொருள்வாதிகள் பற்றிய சித்திரிப்பு-ஒரு மறுமதிப்பீடு (இரத்தினசபாபதி பிரேம்குமார்), இலங்கையில் நவீனத்துவமும் ஓவியச் செல்நெறியும் (சு.சிவரெத்தினம்) ஆகிய ஆறு ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61121).